/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமுதாய நலக்கூடம் அவசியம் பவுஞ்சூர்வாசிகள் கோரிக்கை
/
சமுதாய நலக்கூடம் அவசியம் பவுஞ்சூர்வாசிகள் கோரிக்கை
சமுதாய நலக்கூடம் அவசியம் பவுஞ்சூர்வாசிகள் கோரிக்கை
சமுதாய நலக்கூடம் அவசியம் பவுஞ்சூர்வாசிகள் கோரிக்கை
ADDED : பிப் 24, 2025 11:26 PM
பவுஞ்சூர், பவுஞ்சூர் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் நிலையம், வேளாண் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
பொதுமக்கள் அதிக அளவில் வசித்து வரும் பவுஞ்சூர் பஜார் பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லை. இதனால் பவுஞ்சூர், திருவாதுார், பாலுார், விழுதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது குடும்ப நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில், அதிக கட்டணம் செலுத்தி நடத்தி வருகின்றனர்.
தற்போது, தனியார் திருமண மண்டபங்களில், 20,000 முதல், 50,000 வரை வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சுபநிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதி மக்களின் நலன் கருதி, பவுஞ்சூர் பஜார் பகுதியில் சமுதாயநலக்கூடம் அமைக்கவும், அதன் வாயிலாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.