/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குருவன்மேடு சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி மனு
/
குருவன்மேடு சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி மனு
ADDED : செப் 11, 2024 12:55 AM
மறைமலை நகர்,:-செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், நேற்று மாலை கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள், இடுகாடு மற்றும் சுடுகாடு செல்ல சாலை வசதி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனு விபரம்:
குருவன்மேடு கிராமத்தில், ஆதிதிராவிடர் பகுதியில், 80 குடியிருப்புகள் உள்ளன.
இந்த கிராமத்தில், இதுவரை சுடுகாடாக பயன்படுத்தி வந்த ஓடைப் பகுதியில், ரெட்டிபாளையம் - குருவன்மேடு சாலை மேம்பாலம் கட்டப்பட்டது.
அதனால், சுடுகாட்டிற்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த மாற்று இடத்தை பயன்படுத்த, சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

