/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடிகால்வாய் சுத்திகரிப்பு திட்டம் தண்டலம் ஏரியில் கைவிட மனு
/
வடிகால்வாய் சுத்திகரிப்பு திட்டம் தண்டலம் ஏரியில் கைவிட மனு
வடிகால்வாய் சுத்திகரிப்பு திட்டம் தண்டலம் ஏரியில் கைவிட மனு
வடிகால்வாய் சுத்திகரிப்பு திட்டம் தண்டலம் ஏரியில் கைவிட மனு
ADDED : செப் 17, 2024 09:10 PM
திருப்போரூர்,:திருப்போரூர் அடுத்த தண்டலம் பெரிய ஏரியில் செயல்படுத்தப்பட உள்ள வடிகால்வாய் சுத்திகரிப்பு திட்டத்தை நிறுத்தக்கோரி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின், செங்கல்பட்டு மாவட்ட செயலர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தண்டலம் கிராமத்தில், சர்வே எண் 367/1ல் அடங்கிய பெரிய ஏரி, அப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்த ஏரியில் தரைமட்ட வடிகால் சுத்திகரிப்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகாலில் மழைநீர் மட்டும் செல்லாமல், கழிவுநீரும் கலந்து செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதனால், துாய்மையான ஏரி நீரும், அதன் பாசன பகுதிகளும், மண் வளமும் சாக்கடையாக மாறி மாசடையும் சூழல் ஏற்படும்.
எனவே, மேற்படி திட்டத்தை கைவிட்டு, ஏரியின் துாய்மையை முறையாக பராமரித்து, விவசாய பெருமக்கள் மற்றும் கிராம மக்களின் அடிப்படை உரிமையான நீராதார உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாய சங்க மாவட்ட செயலர் கூறியதாவது:
வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீரானது புதிய வடிகால்வாய் வழியாக வந்து, ஏரியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளத்தில் நேரடியாக நிரம்பும்.
அவ்வாறு பள்ளத்தில் நிரம்பும் போது, பூமியில் ஊறி, அருகே உள்ள குடிநீர் கிணற்று நீர், ஏரி நீர் மாசடையும். இதனால், கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும் நிலை உள்ளது. உடல்நலமும் பாதிப்பாகும். எனவே, இத்திட்டத்தை ஏரியில் செயல்படுத்துவது சரியானது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

