/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 28, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்பாக்கம், கல்பாக்கத்தில், அணுசக்தி துறை பொதுப்பணி சேவைகள் நிர்வாகம் சார்பில், கடந்த 17 முதல் நேற்று வரை, 'ஸ்வச்தா பக்வாடா' வாரம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி நிலம், நீர், காலநிலை உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் மாசுபடுத்துவது குறித்து கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், மட்க இயலாத, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை, பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வலியுறுத்தப்பட்டது.
கடற்கரையில் குவிந்த குப்பையை அகற்றி, துாய்மைப்படுத்தப்பட்டது.
இதில், கல்பாக்கம் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்று, விழிப்புணர்வு பேரணி சென்றனர்.