/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீன் கடை வைப்பதை தவிர்க்க முட்செடிகள் அமைத்து தடுப்பு
/
மீன் கடை வைப்பதை தவிர்க்க முட்செடிகள் அமைத்து தடுப்பு
மீன் கடை வைப்பதை தவிர்க்க முட்செடிகள் அமைத்து தடுப்பு
மீன் கடை வைப்பதை தவிர்க்க முட்செடிகள் அமைத்து தடுப்பு
ADDED : செப் 04, 2024 02:05 AM

செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை எதிரே செய்யூர் - சித்தாமூர் நெடுஞ்சாலையோரத்தில், மாலை நேரத்தில் 15க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டு செயல்படுகிறது.
இங்கு கடப்பாக்கம், பனையூர் உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராம மீனவர்களால், கடலில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவமனை எதிரே மீன் கடைகள் அமைத்து கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாய நிலை இருந்து வந்தது.
மேலும், மாலை நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மீன் கடைகளை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, செய்யூர் ஊராட்சி சார்பில், மீன் விற்பனைக்காக பேருந்து நிலையம் அருகே மாற்று இடம் அமைக்கப்பட்டு, மருத்துவமனை எதிரே முட்செடிகள் வைத்து தடுப்பு ஏற்படுத்துப்பட்டு உள்ளது.