/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் தொழிற்சாலை பணியாளர்கள் போராட்டம்
/
தனியார் தொழிற்சாலை பணியாளர்கள் போராட்டம்
ADDED : ஆக 09, 2024 10:33 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே புதுப்பட்டு கிராமத்தில், காரின் உள் பகுதிக்கு, வெளியில் இருந்து வரும் ஒலியை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் சீட், மேட் போன்றவை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில், அடிப்படை வசதிகள் இல்லை என கூறி, நேற்று முன்தினம், தொழிற்சங்கம் சார்பாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரே, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல வேலைக்கு வந்த, 50 தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகம் உள்ளே அனுமதிக்காததால், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன், தொழிலாளர்கள், தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதி, சுமுக முடிவு ஏற்பட்டதால், தொழிலாளர்களை மீண்டும் தொழிற்சாலை நிர்வாகம் வேலைக்கு அனுமதித்தது.
அதேபோல், மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையிலும், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

