/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிழற்குடையில் திட்ட மதிப்பீடு தகவல் தவிர்ப்பு
/
நிழற்குடையில் திட்ட மதிப்பீடு தகவல் தவிர்ப்பு
ADDED : ஏப் 22, 2024 05:50 AM

திருக்கழுக்குன்றம்,: சட்டசபை, லோக்சபா ஆகிய தொகுதிகள் மேம்பாட்டு நிதியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், பயணியர் நிழற்குடை அமைப்பது, நடைமுறையில் உள்ளது. நிழற்குடையில், திட்டப் பணி நிதியாண்டு, திட்ட மதிப்பீடு ஆகிய தகவல்கள் குறிப்பிடப்படும்.
நிழற்குடைக்கான நிதி, அரசு திட்டத்தில் கட்டப்படும் வீட்டின் மதிப்பீடை விட, பல மடங்கு அதிகமாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வலைதளங்களில் பதிவிட்டு விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில், புதிய நிழற்குடைகளில், திட்ட மதிப்பீட்டுத் தொகையை குறிப்பிடுவதை அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர்.
செய்யூர் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், சூராடிமங்கலம், லட்டூர் ஷா நகர் ஆகிய பகுதிகளில், 2022 - 23 செய்யூர் தொகுதி மேம்பாட்டு நிதியில், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், திட்ட மதிப்பீட்டை குறிப்பிடாமல், அதிகாரிகள் தவிர்த்துள்ளதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

