/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பறிமுதல் வாகனங்கள் வரும் 12ல் பொது ஏலம்
/
பறிமுதல் வாகனங்கள் வரும் 12ல் பொது ஏலம்
ADDED : மார் 08, 2025 11:41 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையால், சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 12ம் தேதி, பொது ஏலம் விடப்பட்டுகின்றன.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஏற்கனவே ஏலம் போகாத 18 வாகனங்கள் என, மொத்தம் 37 வாகனங்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகிலுள்ள ஐ.டி.ஐ., வளாகத்தில், வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு, பொது ஏலம் விடப்படும். பங்கேற்க விரும்பம் உள்ளவர்கள், 11ம் தேதி மாலை 5:00 மணிக்குள், நுழைவு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். விவரங்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.