/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் கல் குவாரி கிரஷர்களில் ஆன்லைனில் பணம் பெற மறுப்பு
/
செய்யூர் கல் குவாரி கிரஷர்களில் ஆன்லைனில் பணம் பெற மறுப்பு
செய்யூர் கல் குவாரி கிரஷர்களில் ஆன்லைனில் பணம் பெற மறுப்பு
செய்யூர் கல் குவாரி கிரஷர்களில் ஆன்லைனில் பணம் பெற மறுப்பு
ADDED : ஏப் 05, 2024 10:16 PM
செய்யூர்:செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், ஜமீன் எண்டத் துார், ஓணம்பாக்கம், நெல்வாய்பாளையம், ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், பல கல் குவாரி கள் செயல்படுகின்றன.
கல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் பாறைகள், கிரஷர்களில் நொறுக்கப்பட்டு, ஜல்லி, 'எம் - -சாண்ட், பி - சாண்ட்' போன்றவை தயார்செய்யப்படுகின்றன.
லாரிகள் வாயிலாக டன் கணக்கில் ஜல்லி, எம் - -சாண்ட், பி - சாண்ட், கருங்கற்கள் ஆகியவை கட்டுமானப் பணிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
பெரும்பாலான கல் குவாரி கிரஷர்களில் விற்பனை செய்யப்படும் ஜல்லி, எம்- - சாண்ட், பி - சாண்ட் போன்ற பொருட்களுக்கு, பொதுமக்களிடம் இருந்து நேரடி பணமாக மட்டுமே வாங்கப்படுகிறது.
பெட்டிக்கடை முதல் பெட்ரோல் பங்க் வரை, அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நடக்கும் இந்த காலகட்டத்தில், கல்குவாரி கிரஷர்களில் ஆன்லைனில் பணம் வாங்க மறுப்பதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாதகட்டுமானத் தொழிலாளர் ஒருவர் கூறியதாவது:
செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஆற்றில்மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானகட்டடங்கள் எம் - -சாண்ட், பி - சாண்ட் பயன்படுத்தியே கட்டப்பட்டு வருகின்றன.
கிரஷர்களில் இருந்து டன் கணக்கில் வாங்கப்படும் கட்டுமானப் பொருட்களுக்கு, நேரடி பணமாக வழங்கினால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பதே நடைமுறையில் இல்லை.
டீக்கடையிலேயே யு.பி.ஐ., வாயிலாக பணம் பெறப்படும் நிலையில், கிரஷர்களில் செயல்படுத்தப்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அரசுக்கு வரி செலுத்துவதில் முறைகேடு செய்ய, ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை தவிர்த்து, நேரடி பணமாக மட்டுமே வாங்கப்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள்,கிரஷர்களில் இருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மற்றும் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் முறையை நடைமுறைபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.

