/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : ஆக 18, 2024 12:48 AM

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், சதுரங்கப்பட்டினம் சாலை பகுதியில், பலவகை வியாபார கடைகள், மீன் மார்க்கெட் ஆகியவை உள்ளன. வியாபாரிகள், சாலைப் பகுதியை ஆக்கிரமித்து, கடைகளை நீட்டித்து கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால், சாலை மிகவும் குறுகியுள்ளது.
கடைகளில் பொருட்கள் வாங்க, கார், இருசக்கர வாகனத்தில் வருவோர், தங்களின் வாகனங்களை கடைகளுக்கு முன் சாலையில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். நீண்டநேரம் கடந்தே எடுக்கின்றனர்.
இச்சாலையில், செங்கல்பட்டு, கல்பாக்கம் பகுதி வாகனங்கள், அரசு பேருந்துகள் செல்லும் நிலையில், கடை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் நெரிசல் ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் சாலை உள்ள நிலையில், அத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைப்பகுதியை மீட்டு விரிவுபடுத்துமாறு, இப்பகுதியினர் வலியுறுத்தினர்.
அதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
சாலையை விரிவுபடுத்தவும், இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கவும் முடிவெடுத்த பேரூராட்சி நிர்வாகத்தினர், தற்போது சாலையில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றி வருகின்றனர்.