ADDED : ஆக 05, 2026 04:50 PM
சிங்கபெருமாள் கோவில், ஆக. 6--–
செட்டிபுண்ணியம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சே கரமாகும் குப்பை கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டி புண்ணியம் ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
செட்டிபுண்ணியத்தை சுற்றியுள்ள செந்தில் நகர், கணபதி நகர், டாக்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை துாய்மை பணியாளர்கள் முறையாக நீக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்கு குப்பை தொட்டிகள் இல்லாததால், தெருக்களின் ஓரங்களிலும், மழைநீர் வழித்தடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குப்பை கழிவுகளை அகற்ற வேண்டிய ஊராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் குடியிருப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, குடியிருப்பு பகுதிகளில் முறையாக குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
