/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம்- - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்க கோரிக்கை
/
தாம்பரம்- - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்க கோரிக்கை
தாம்பரம்- - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்க கோரிக்கை
தாம்பரம்- - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்க கோரிக்கை
ADDED : ஏப் 28, 2024 01:56 AM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செம்பாக்கம் கிராமத்திற்கு, தாம்பரத்தில் இருந்து, தடம் எண்: 55 என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இப்பேருந்து, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம், கொட்டமேடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக செம்பாக்கம் வருகிறது.
இதில், 4 கி.மீ.,யில் உள்ள மானாமதி கிராமம் வரை, இந்த பேருந்தை நீட்டிக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, செம்பாக்கம் பகுதிவாசிகள் கூறியதாவது:
மானாமதியை சுற்றியுள்ள பகுதி மக்கள், செம்பாக்கம், கொட்டமேடு, நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி பகுதிக்கு செல்ல வேண்டுமானால், 20 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும்.
இதனால், அன்றாட தேவைகளுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தடம் எண்: 55 என்ற அரசு பேருந்தை, மானாமதி வரை நீட்டிப்பு செய்தால், 20,000த்திற்கும் மேற்பட்டோருக்கு பயனுள்ளதாக அமையும்.
மேலும் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோருக்கும், மானாமதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கும், இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.