/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுகோள்
/
உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுகோள்
ADDED : செப் 09, 2024 06:26 AM
சித்தாமூர்: சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில், ஏரிக்கரை அருகே விநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவில் வளாகத்தை ஒட்டி, அஞ்சல் அலுவலகம், அரசு ஆரம்பப் பள்ளி, அங்கன்வாடி மையம், கடைகள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
கோவில் எதிரே நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பு உள்ளது. அச்சந்திப்பில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து, அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும், போதிய வெளிச்சம் இல்லாததால், கோவிலுக்கு அருகே உள்ள அஞ்சலகத்தில் இரண்டு முறை, இரவு நேரத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விநாயகர் கோவில் எதிரே உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.