/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலை ஓரம் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை
/
நெடுஞ்சாலை ஓரம் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை
நெடுஞ்சாலை ஓரம் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை
நெடுஞ்சாலை ஓரம் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை
ADDED : ஏப் 18, 2024 10:56 PM

மறைமலை நகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் சாலை சந்திப்பில், புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளுக்காக, மூன்று மாதங்களுக்கு முன், இந்த பகுதியில் இருந்த குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவை முழுதும் இடித்து அகற்றப்பட்டன.
மேலும், நெடுஞ்சாலை துறை சார்பில், இந்த பகுதியில் தற்போது மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பகுதியில் இருந்த கடைகளுக்கு மின் வாரியம் வாயிலாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது, அந்த மின் கம்பங்களும் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டு, புதிய கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், கட்டடங்களை இடிக்கும்போது சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளன.
இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பேருந்துக்காக காத்திருக்கும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் அச்சதுடன் இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

