/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமந்தபுரத்தில் கழிப்பறை சீரமைக்க கோரிக்கை
/
அனுமந்தபுரத்தில் கழிப்பறை சீரமைக்க கோரிக்கை
ADDED : மார் 05, 2025 01:45 AM

மறைமலை நகர்:திருப்போரூர் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கிராம மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இங்கு அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட விஷேச தினங்களில் சென்னை, தாம்பரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கிராமத்தில் ஊராட்சி சார்பில் 2014ல் இலவச பொதுக் கழிப்பறை கட்டப்பட்டது.
இந்த கழிப்பறை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் குழாய்கள் உடைந்த நிலையில் வீணாகி வருகிறது.
இதன் காரணமாக கிராமத்தில் பொது வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் பழக்கம் அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிப்பறையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.