/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அகத்தீஸ்வரர் மலைக்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
/
அகத்தீஸ்வரர் மலைக்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
அகத்தீஸ்வரர் மலைக்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
அகத்தீஸ்வரர் மலைக்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : பிப் 27, 2025 09:00 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனந்தமங்கலம் ஊராட்சியில், 1,000 ஆண்டுகள் பழமை வாழ்ந்த ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் மலைக் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.
அதேபோன்று பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
இக்கோவிலுக்கு மாசி மஹா சிவராத்திரி, சித்திரை பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற விழாக்களுக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டிவனம், செஞ்சி, வந்தவாசி, உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர்.
இந்த மஹா சிவராத்திரி பெருவிழாவிற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள், தனியார் ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் கோவிலுக்கு வந்தனர்.
எனவே, மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் இருந்து ஒரத்தி வரை செல்லும், தடம் எண்: 'டி12, டி23' அரசு பேருந்துகளை, அனந்தமங்கலம் மலைக்கோவில் வரை காலை மற்றும் மாலை வேளைகளில் சென்று வரும் வகையில் நீட்டிக்க வேண்டும்.
விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்.
மேலும், வந்தவாசியில் இருந்து ஒரத்தி வழியாக அனந்தமங்கலம் மலைக்கோவில் வரை, பேருந்து இயக்க வேண்டும்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.