/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமுதாய நலக்கூடம் அமைக்க வெங்கடாபுரத்தில் கோரிக்கை
/
சமுதாய நலக்கூடம் அமைக்க வெங்கடாபுரத்தில் கோரிக்கை
ADDED : ஆக 16, 2024 11:45 PM
மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில், வெங்கடாபுரம், சாஸ்திரம்பாக்கம், தெள்ளிமேடு உள்ளிட்ட மூன்று கிராமங்கள் உள்ளன. இவற்றில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதிவாசிகள், தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளை, சிங்கபெருமாள் கோவில், வல்லக்கோட்டை பகுதி தனியார் திருமண மண்டபங்களில், அதிக வாடகை செலுத்தி நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
வெங்கடாபுரம் பகுதியில் சமுதாய கூடம் இல்லாததால், ஏழை மக்கள் தங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தவும் போதிய இடவசதி இல்லாததால், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம், 4 கி.மீ., தொலைவில் சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. இங்கு சென்று வர முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்தனர்.
எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய சமுதாய நலக்கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.