/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் சேமிப்பு கிடங்கு அருகே குப்பை எரிப்பால் விபத்து அபாயம்
/
நெல் சேமிப்பு கிடங்கு அருகே குப்பை எரிப்பால் விபத்து அபாயம்
நெல் சேமிப்பு கிடங்கு அருகே குப்பை எரிப்பால் விபத்து அபாயம்
நெல் சேமிப்பு கிடங்கு அருகே குப்பை எரிப்பால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 12, 2024 12:16 AM

மதுராந்தகம்::மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில் தமிழக அரசின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. தற்போது,14.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீனநெல் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இங்குள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டு உள்ளது.
இந்த நெல் சேமிப்பு கிடங்கு உள்ள பகுதியின் அருகிலேயே, சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு அமைந்துள்ளது. சுடுகாடு பகுதி மற்றும் கல் குவாரிகள் அருகே பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த குப்பையை மர்ம நபர்கள் சிலர், தீயிட்டு எரித்து விடுகின்றனர். இவ்வாறு எரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளால், திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.