/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் காய்ந்த மரம் கழனிப்பாக்கத்தில் ஆபத்து
/
சாலையோரம் காய்ந்த மரம் கழனிப்பாக்கத்தில் ஆபத்து
ADDED : ஜூலை 02, 2024 10:49 PM
மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், கூடலுார் ஊராட்சிக்கு செல்லும் சாலையோரம் கழனிப் பாக்கம் கிராமம்உள்ளது.
இதில், கழனிப்பாக்கம், பிள்ளையார் கோவில் குளக்கரை வழியாக செல்லும் தார் சாலையை, கூடலுார் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குளக்கரையின் மீது, மூன்று வேப்ப மரங்கள் காய்ந்து போய் உள்ளன. காய்ந்து போன மரங்கள் அருகே, வீட்டு மின் இணைப்புகள் மற்றும் மின் மோட்டார்களுக்கு மின்சாரம் செல்லும் மின்கம்பி உள்ளது.
மழைக் காலங் களில், மின்கம்பிகளின் மீது காய்ந்து போன மரங்கள் முறிந்துவிழும் சூழ்நிலை உள்ளது.
எனவே, குளக்கரையின் மீது, அசம்பாவிதம் ஏற்படும் வகையில் பயன்பாடற்று காய்ந்து போய் உள்ள மரங்களை, வெட்டி அப்புறப்படுத்த மின்வாரியத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.