/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
/
சித்தாமூரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மார் 05, 2025 02:00 AM

சித்தாமூர்:சித்தாமூர் பகுதியில் உள்ள சரவம்பாக்கம் கூட்ரோட்டில் இருந்து செய்யூர், சூணாம்பேடு, சோத்துப்பாக்கம் மற்றும் மதுராந்தகம்செல்லும் சாலை ஓரத்தில்100க்கும் மேற்பட்டகடைகள் செயல்பட்டுவருகின்றன.
நல்லாமூர், பொலம்பாக்கம், கொளத்துார், தொன்னாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சரவம்பாக்கம் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
செய்யூர்-போளூர் இடையே, 600 கோடி ரூபாய் மதிப்பில் 110 கி.மீ நீளமுடைய சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சாலை விரிவாக்கத்தின்போது, சரவம்பாக்கம்கூட்ரோடு பகுதியில் இரண்டு புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
சாலையோர கடை வியாபாரிகள் புதிதாக அமைக்கப்பட்ட கால்வாயின் மீதுஆக்கிரமித்து படிக்கட்டுகள்,கூரைகள் அமைத்து இருந்ததால், நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நோட்டீஸ் வழங்கினர்.
வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதனால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரம்வாயிலாக கால்வாய் மீது அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளைஅகற்றினர்.