/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆர்.டி.ஓ.,க்கள் எச்சரிக்கை
/
தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆர்.டி.ஓ.,க்கள் எச்சரிக்கை
தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆர்.டி.ஓ.,க்கள் எச்சரிக்கை
தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆர்.டி.ஓ.,க்கள் எச்சரிக்கை
ADDED : மே 26, 2024 09:30 PM

சோழிங்கநல்லுார் : பள்ளிகள், ஜூன் 6ல் திறக்க உள்ளதால், சோழிங்கநல்லுார், திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பள்ளி வாகனங்களின் தரம் குறித்து, நேற்று சோதனை செய்யப்பட்டது.
கிண்டி கோட்டாட்சியர் பாபு, சோழிங்கநல்லுார் தாசில்தார் சிவகுமார், போலீசார், தலைமை ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
சோழிங்கநல்லுார் ஆர்.டி.ஓ., யுவராஜ் தலைமையில், 331 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 302 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இருக்கை சேதம், உயரமான படிகள், காலாவதியான தீயணைப்பு கருவிகள், செயல்படாத கேமராக்கள், அவசர வழி கதவு சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்த 29 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.
திருவான்மியூர் ஆர்.டி.ஓ., பழனிவேல் தலைமையில், 149 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 9 வாகனங்களை நிராகரித்து, 140 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிராகரித்த, 38 வாகனங்களுக்கு உரிய அனுமதி பெற்று தான் இயக்க வேண்டும். மீறினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என, பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

