/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சங்குதீர்த்த குளத்தை சுத்தப்படுத்த உத்தரவு
/
சங்குதீர்த்த குளத்தை சுத்தப்படுத்த உத்தரவு
ADDED : ஏப் 27, 2024 12:03 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம்வேதகிரீஸ்வரர் கோவிலின் தீர்த்தம் சங்குதீர்த்தகுளத்தில் கடந்த மார்ச் 7ம் தேதி, அதிசய சங்கு தோன்றியது. ஏப்., 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை, சித்திரை பெருவிழாவும் நடந்தது.
உற்சவத்தைக் காண திரண்ட பக்தர்கள், சங்குதீர்த்தகுளத்தில் அக்கறையின்றி, காலி குடிநீர் பாட்டில், பிரசாத தாள்கள் உள்ளிட்ட குப்பையை குளத்தில் குவித்து, குளம் முழுதும் அலங்கோலத்துடன் காணப்படுகிறது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, கலெக்டர் அருண்ராஜ் நேற்று மாலை 6:45 மணிக்கு, குளத்தை பார்வையிட்டார்.
குளத்தில் உள்ள குப்பை மற்றும் மலைக்குன்று பகுதி குப்பை ஆகியவற்றை அகற்றவும், துாய்மையாக பராமரிக்கவும் செயல் அலுவலர் புவியரசுவிடம் அறிவுறுத்தினார்.
தற்போதைக்கு உழவாரப் பணி செய்து துாய்மைப்படுத்துவதாக, கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டது.
பேரூராட்சியின் வேண்டுகோள் குறித்து, அறநிலையத்துறை ஆணையரிடம் ஆலோசிப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

