ADDED : பிப் 22, 2025 11:43 PM
திருக்கழுக்குன்றம்,திருக்கழுக்குன்றம் அடுத்த, வீராபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்குகிறது.
இப்பள்ளி, கடந்த 1925ம் ஆண்டில் துவக்கப்பட்டு, நுாற்றாண்டை கடந்த நிலையில், நேற்று முன்தினம் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, நுாற்றாண்டு விழா சுடர், தேசியக் கொடியேற்றி, காமராஜர் சிலையை திறந்தார். மரக்கன்றுகள் நடப்பட்டன.
முன்னாள் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவ - மாணவியர், சிலம்பம், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தினர்.
இங்குள்ள உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த, பொதுமக்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுப்பதாக, எம்.எல்.ஏ., உறுதியளித்தார். பள்ளி நிர்வாகத்தினர், கல்வித்துறையினர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று கலைநிகழ்ச்சிகளுடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. மாணவ - மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது.