/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் சுரங்கப்பணி நிறைவு
/
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் சுரங்கப்பணி நிறைவு
ADDED : ஏப் 10, 2024 10:46 PM
சென்னை:சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மொத்தம் 117 கி.மீ., துாரத்திற்கு, மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன.
இதில், 69 கி.மீ., துாரம், சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக மாதவரம் - சிப்காட் தடத்தில், 43.04 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைகிறது.
மாதவரத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரின் துவக்கப்பட்ட மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதுவரையில், 10 கி.மீ., துாரம் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
மாதவரம் - தரமணி தடத்தில் 9.50 கி.மீ., கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மீனாட்சி கல்லுாரி தடத்தில், 0.50 கி.மீ., துாரம் சுரங்கம் தோண்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட திட்டத்தில் தற்போது, 18 போர்வெல் ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி, சுரங்கம் தோண்டி வருகிறோம். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், மேம்பால ரயில் பாதைக்கான பணிகளை முடித்து, 2025 இறுதி முதல், படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை துவக்கி வைக்கப்படும்.
வரும் 2027 துவக்கத்தில், அனைத்து மேம்பால மெட்ரோ ரயில் பணிகளும் முடிக்கப்படும். அதுபோல், வரும் 2028ல் சுரங்கப்பாதையில் பணிகள் நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு கூறினர்.

