/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரதமர் வருகை சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
/
பிரதமர் வருகை சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
பிரதமர் வருகை சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
பிரதமர் வருகை சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
ADDED : ஏப் 08, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை தி.நகரில் பாண்டி பஜார் தியாகராயர் சாலையில், பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ நடத்த உள்ளார். தியாகராய நகர் ஸ்மார்ட் சிட்டி சாலையில், ரோடு ஷோ நடைபெற உள்ளது.
இதற்காக, அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், சாலை ஒட்டு பணிகள், மரக் கிளையில் தேன் கூடுகள் உள்ளனவா என, ஆய்வு செய்கின்றனர்.
பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகள் குறித்து, குடிநீர் வாரியம் சோதனை செய்து வருகிறது. அத்துடன், 'ஸ்மார்ட் சிட்டி' நடைபாதையில் இரும்பு தடுப்புஅமைக்கும் பணி நடக்கிறது.