/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் இ - சேவை மையம் அறிவிப்பின்றி மூடப்பட்டதால் அவதி
/
செய்யூர் இ - சேவை மையம் அறிவிப்பின்றி மூடப்பட்டதால் அவதி
செய்யூர் இ - சேவை மையம் அறிவிப்பின்றி மூடப்பட்டதால் அவதி
செய்யூர் இ - சேவை மையம் அறிவிப்பின்றி மூடப்பட்டதால் அவதி
ADDED : ஏப் 18, 2024 10:52 PM

செய்யூர்:செய்யூர் தாலுகா அலுவலகத்தில், இ- - சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், வாரிசு சான்றிதழ் பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படுகின்றன.
செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கடப்பாக்கம், சூணாம்பேடு, சித்தாமூர், பவுஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நாள்தோறும் ஏராளமானோர் இந்த இ- -சேவை மையத்திற்கு வந்து செல்கின்றனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி இருந்ததால், இ- - சேவை மையம் தற்காலிகமாக நேற்று மூடப்பட்டது.
இ- - சேவை மையம் மூடப்பட்டதற்கான எந்த வித அறிவிப்பும் ஒட்டப்படவில்லை.. அதனால், பல்வேறு தேவைகளுக்காக வந்த மக்கள், வட்டாட்சியர் அலுவகத்தில் இ- - சேவை மையத்தை தேடி அலைந்து, பின் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஆகையால், இ- - சேவை மையம் மூடப்பட்டது தொடர்பான அறிவிப்பை, கதவுகளில் ஒட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

