/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் தலைமறைவு குற்றவாளி கைது
/
சிங்கபெருமாள் கோவிலில் தலைமறைவு குற்றவாளி கைது
ADDED : செப் 17, 2024 09:18 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் மண்டபத் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்ற 'ஓட்ட' கார்த்திக், 30. இவர் மீது, இரண்டு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நீதிமன்ற ஜாமினில் வெளிவந்த கார்த்திக், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம், சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலையில் கார்த்திக் சுற்றித்திரிவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் சென்ற போலீசார், கார்த்தியை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணைக்கு பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.