/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சொத்து தகராறில் கூலிப்படை வைத்து பெரியப்பாவை கார் ஏற்றி கொல்ல முயற்சி தம்பி மகள் உட்பட 6 பேர் கைது

ADDED : மார் 04, 2025 08:59 PM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த முருகம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன், 72, கடந்த மாதம் 9ம் தேதி முருகம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற இண்டிகா கார் அர்ஜுனன் மீது மோதியது.
இதில் அர்ஜுனன் பலத்த காயமடைந்தார். செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அணைக்கட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், அர்ஜுனனுக்கும், சென்னை நொளம்பூர் பகுதியில் வசித்து வரும் அவரது தம்பி மகள் தீபாவிற்கும், 42 பூர்வீக சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் அர்ஜுனனை கொலை செய்ய திட்டமிட்ட தீபா அவரது கணவர் சண்முகம், 53 உடன் இணைந்து திட்டம் தீட்டி உள்ளார்.
இதையடுத்து சண்முகத்திடம் கார் ஓட்டுனராக வேலை செய்து வந்த முருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தசரதன், 39 மற்றும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அய்யனார், 40 சுரேஷ்குமார், 36 அசோக்குமார், 35 ஆகியோர் அர்ஜுனனை கார் ஏற்றி கொலை செய்ய 10 லட்சம் ரூபாய் பேரம் பேசினர். இதில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முன்பணமாக பெற்றுள்ளனர்.
பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படையினர் சாலையில் நடந்து சென்ற அர்ஜுனனை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தது தெரிந்தது.
இதையடுத்து தீபா உட்பட 6 பேரையும் அணைக்கட்டு போலீசார் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தீபா புழல் சிறையிலும் மற்றவர்கள் செங்கல்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.