/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிதாக சமுதாய கூடம் அமைக்க சோத்துப்பாக்கம் வாசிகள் கோரிக்கை
/
புதிதாக சமுதாய கூடம் அமைக்க சோத்துப்பாக்கம் வாசிகள் கோரிக்கை
புதிதாக சமுதாய கூடம் அமைக்க சோத்துப்பாக்கம் வாசிகள் கோரிக்கை
புதிதாக சமுதாய கூடம் அமைக்க சோத்துப்பாக்கம் வாசிகள் கோரிக்கை
ADDED : மே 26, 2024 01:51 AM
மேல்மருவத்துார்:சித்தாமூர் ஒன்றியம், மேல்மருவத்துார் அருகே சோத்துப்பாக்கம் ஊராட்சி உள்ளது.
வந்தவாசி- - செய்யூர் மாநில நெடுஞ்சாலை, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை என, வாகனங்கள் கடந்து செல்லும் பரபரப்பான பகுதியில் சோத்துப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது.
இப்பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயம் மற்றும் கட்டட தொழில் செய்யும் மக்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது.
இப்பகுதி வாசிகள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், சித்தாமூர், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால், பொருளாதார சிக்கலும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூட கட்டடம் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.