/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாயில் கல் தடுப்புகள் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
/
கால்வாயில் கல் தடுப்புகள் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
கால்வாயில் கல் தடுப்புகள் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
கால்வாயில் கல் தடுப்புகள் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
ADDED : மே 18, 2024 12:16 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 19வது வார்டு, திருக்கச்சூர் ஈஸ்வரன் நகரில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் கால்வாயில் வெளியேறுகிறது. தற்போது, அந்த கால்வாய் முழுதும் பிளாஸ்டிக் குப்பை நிரம்பி காணப்படுகின்றன.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன், மழைநீர் கால்வாய் மீது கட்டுமான பணிகள் நடைபெற்ற போது, கால்வாய் குறுக்கே கற்கள் அமைத்து, கழிவுநீர் தடுக்கப்பட்டது.
தற்போது, பணிகள் முடிந்தும் இந்த தடுப்புகள் அகற்றப்படாததால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இரவில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
எனவே, இந்த கால்வாயை சுத்தம் செய்து, தடுப்புகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.