ADDED : மார் 11, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:செங்கல்பட்டு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பரனுார், மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல், மேக மூட்டத்துடன் லேசான மழை பெய்தது.
மாலை 5:30 மணியளவில், திடீரென வானிலை மாற்றம் காரணமாக செங்கல்பட்டு, புலிப்பாக்கம், பரனுார், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது.
இதன் காரணமாக, பணிமுடிந்து வீட்டிற்குச் செல்லும் வாகன ஓட்டிகள், பெண்கள் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.