/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் கைது; மூவருக்கு வலை
/
செங்கையில் சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் கைது; மூவருக்கு வலை
செங்கையில் சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் கைது; மூவருக்கு வலை
செங்கையில் சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் கைது; மூவருக்கு வலை
ADDED : ஆக 09, 2024 01:46 AM
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால், செங்கல்பட்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் பாக்கெட் வினியோகித்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி, வல்லம் பகுதியில், சிறுவன் ஆட்டோவில் அமர்ந்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அபினேஷ், 24, ஆகாஷ், 27, நரேஷ், 28, உள்ளிட்டோர் சிறுவனை அமணம்பாக்கம் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று, உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.
அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து, மருத்துவமனை ஊழியர்கள் அளித்த தகவலின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபினேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன் வல்லம் பகுதியில் இருசக்கர வாகனம் வேகமாக ஓட்டிய போது, சிறுவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, தற்போது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
தலைமறைவாக உள்ள ஆகாஷ், நரேஷ் மற்றும் இதில் தொடர்புடைய இவர்களது நண்பர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.