/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காணாமல் போனவர் உடல் அழுகிய நிலையில் மீட்பு
/
காணாமல் போனவர் உடல் அழுகிய நிலையில் மீட்பு
ADDED : மே 14, 2024 06:38 AM
பவுஞ்சூர்: பவுஞ்சூர் கிராமத்தில் உள்ள ஓடைக்கரை பகுதியில், ரேணு என்பவர் புல் அறுக்க சென்றபோது, ஓடை அருகே, பாதி அழுகிய நிலையில், மனித உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதுகுறித்து, அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆய்வு செய்ததில், 70 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் என தெரியவந்தது.
இதையடுத்து, பாதி அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், அப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போன முதியவர்களின் விபரங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடைகள் குறித்து, போலீசார் விசாரித்தனர்.
அதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன, பவுஞ்சூர் பகுதியை சேர்ந்த பத்திநாதன், 70, என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பின், உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

