/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விஷ்வேசபுரம் குப்பை கிடங்கில் தீ 10 மணி நேரம் போராடி அணைப்பு
/
விஷ்வேசபுரம் குப்பை கிடங்கில் தீ 10 மணி நேரம் போராடி அணைப்பு
விஷ்வேசபுரம் குப்பை கிடங்கில் தீ 10 மணி நேரம் போராடி அணைப்பு
விஷ்வேசபுரம் குப்பை கிடங்கில் தீ 10 மணி நேரம் போராடி அணைப்பு
ADDED : மே 31, 2024 02:31 AM

பம்மல்:தாம்பரம் மாநகராட்சி, 1, 2வது மண்டலங்களில் சேகரமாகும் குப்பை, பம்மல் விஸ்வேசபுரம் கிடங்கில் கொட்டப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில், பசுமை உரக்கிடங்குகள் முறையாக செயல்படாததால், தினமும் கிடங்கிற்கு டன் கணக்கில் குப்பை எடுத்துச் செல்லப்படுகிறது.
மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில், நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி, கிடங்கு முழுதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் புகைமூட்டம் அதிகரித்து, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பத்து மணி நேர போராட்டத்திற்கு பின், அதிகாலை, 4:30 மணிக்கு வீரர்கள் தீயை அணைத்தனர். இதேபோல், கடந்த மாதம், கன்னடப்பாளையம் குப்பை கிடங்கிலும் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.