/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நவீன கழிப்பறை கட்டடம் சீரழிந்து வரும் அவலம்
/
நவீன கழிப்பறை கட்டடம் சீரழிந்து வரும் அவலம்
ADDED : ஆக 25, 2024 01:16 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி அனுமந்தபுத்தேரி பகுதியில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட கல்வி அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், கழிப்பறை கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, அனுமந்தபுத்தேரி ஜி.எஸ்.டி., சாலை அருகே, 2023ம் ஆண்டு துாய்மை இந்தியா திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன கழிப்பறை கட்டும் பணி துவங்கி, கடந்தாண்டு பணிகள் நிறைவு பெற்றன.
ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு வரமால் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே, லோக்சபா தேர்தல் பணிக்காக மட்டும் கழிப்பறை திறக்கப்பட்டது. அதன்பின், மீண்டும் கழிப்பறை மூடப்பட்டது.
எனவே, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.