/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'குருவி'யாக செயல்பட்டவரை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து சித்ரவதை
/
'குருவி'யாக செயல்பட்டவரை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து சித்ரவதை
'குருவி'யாக செயல்பட்டவரை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து சித்ரவதை
'குருவி'யாக செயல்பட்டவரை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து சித்ரவதை
ADDED : ஏப் 08, 2024 11:38 PM
சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி, முகமது அப்துல்லா தெரு, இரண்டாவது லேன் பகுதியிலுள்ள லாட்ஜ் ஒன்றில், கடந்த சில நாட்களாக ஒருவரை அடைத்து வைத்துசித்ரவதை செய்வதாக, திருவல்லிக்கேணிபோலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன் தினம் இரவு, சம்பந்தப்பட்ட லாட்ஜில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு புதுக்கோட்டை, அறந்தாங்கி, கோபாலபட்டிணம், சின்ன வாசலைச் சேர்ந்த அப்துல் சுக்கூர், 45, என்பவரை அடைத்து வைத்து சித்ரவதைசெய்தது தெரிந்தது.
போலீசார் அவரை மீட்டு, அங்கிருந்த திருச்சி, மேல சிந்தாமணியைச் சேர்ந்த குணா,23, திருச்சி, தென்னுார் பகுதியைச் சேர்ந்த முகமது அர்ஷரத், 24, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய், போலி ஆதார் கார்டுகள், மொபைல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
அப்துல் சுக்கூர், துபாய்க்கு சென்று வரும் 'குருவி'யாக செயல்பட்டு வந்துள்ளார். ஜாசிம் என்பவர் இவரிடம், துபாயில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி வரும்படி, 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
துபாய் சென்ற அப்துல் சுக்கூர், அங்கு அவருக்கு இருந்த கடனை அடைத்து விட்டு, பொருட்கள்வாங்காமல் சென்னை திரும்பி உள்ளார்.
பின் அவர், திண்டிவனத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
ஜாசிம் உடன் வேலை பார்க்கும் குணா, முகமது அர்ஷரத் ஆகியோர் ஒன்று சேர்ந்து, அப்துல் சுக்கூரை காரில் கடத்தி வந்து, திருவல்லிக்கேணி லாட்ஜில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தெரிந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

