/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேறும், சகதியுமாக மாறிய தார்ச்சாலை 10 ஆண்டுகளாக அதிகாரிகள் பாராமுகம்
/
சேறும், சகதியுமாக மாறிய தார்ச்சாலை 10 ஆண்டுகளாக அதிகாரிகள் பாராமுகம்
சேறும், சகதியுமாக மாறிய தார்ச்சாலை 10 ஆண்டுகளாக அதிகாரிகள் பாராமுகம்
சேறும், சகதியுமாக மாறிய தார்ச்சாலை 10 ஆண்டுகளாக அதிகாரிகள் பாராமுகம்
ADDED : ஆக 13, 2024 12:09 AM

அச்சிறுபாக்கம்: கொங்கரை - மாம்பட்டு -- சிறுதாமூர் செல்லும் சாலையில் பிரிந்து, காப்புகாடு வழியாக ஈச்சங்காடு, வடமணிப்பாக்கம், எட்டிப்பட்டு வழியாக ஒரத்தி செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை வழியாக கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், ஒரத்தியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கும், திண்டிவனம் பகுதியில் உள்ள கல்லுாரிகளுக்கும் சென்று வருகின்றனர்.
இச்சாலை, கொங்கரை - மாம்பட்டு கிராமத்தில் இருந்து, ஒரத்தி மருத்துவமனை மற்றும் நகர் பகுதிகளுக்கு செல்லும் மிக முக்கிய கிராம சாலையாக உள்ளது.
மேலும், இப்பகுதி விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு விவசாயிகளின் தோட்டக்கலை காய்கறிகளை ஏற்றிச் செல்லும் மினி வேன்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது.
எனவே, வரும் பருவ மழை காலத்திற்குள், சாலையை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்த அப்பகுதியினர் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஈச்சங்காடு, எட்டிப்பட்டுக்கு செல்லும் சாலை, மண் சாலையாக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன், தார்ச்சாலையாக மாற்றப்பட்டது.
பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், சாலை குண்டும், குழியுமாகி மாறியுள்ளது. மேலும், ஜல்லி கற்கள் பெயர்ந்து கவலைகிடமாக காட்சியளிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
வடமணிப்பாக்கம், சென்னேரி ஊராட்சி புன்செய் நிலப்பரப்பில் இருந்து வெளியேறும் மழை நீர், கொங்கரை - மாம்பட்டு ஏரிக்கு செல்லும் பகுதியில், சிறு பாலம் அமைத்து, புதிதாக தார்சாலை அமைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, கலெக்டர் மற்றும் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

