/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி அச்சிறுபாக்கம் சாலையில் தீவிரம்
/
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி அச்சிறுபாக்கம் சாலையில் தீவிரம்
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி அச்சிறுபாக்கம் சாலையில் தீவிரம்
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி அச்சிறுபாக்கம் சாலையில் தீவிரம்
ADDED : ஏப் 04, 2024 11:59 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் -- எலப்பாக்கம் நெடுஞ்சாலை, திம்மாபுரம், திருமுக்காடு, மதுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய பிரதான சாலை.
இதில், அச்சிறுபாக்கம் மழைமலை மாதா சர்ச் மற்றும் மதுபானக் கடை, இந்த சாலையோரம் உள்ளதால், இப்பகுதியில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும்.
இதனால், நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக, 3.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அச்சிறுபாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து மின் வாரியத் துறை வரை அலுவலகம் வரை, சாலையின் இரு புறமும், 800 மீட்டர் நீளத்திற்கு, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், மழைமலை மாதா சர்ச் அருகே, சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, நெடுஞ்சாலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், அப்பகுதிமக்கள் முறையாக அளவீடு செய்து, கால்வாய் அமைக்க வேண்டும் என கூறி போரட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது:
அச்சிறுபாக்கம் -- எலப்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், அச்சிறுபாக்கம் பகுதியில், 800 மீட்டர் நீளத்திற்கு, இருபுறமும் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.அதில், 70 சதவீதம் பணிகள்முடிந்துள்ளன.
பள்ளிப்பேட்டை பகுதி 46/2 சர்வே எண்ணில், 16 மீட்டர் நீளத்திற்கு, வளைவுகள் இன்றி நெடுஞ்சாலை நேராக உள்ளது. அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்திஉள்ளோம்.
ஆவணங்களின் அடிப்படையில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.

