sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கால்வாயை துார்வார நிதியில்லை ; மிதவை உணவகம் இயக்கம் தாமதம் :சுற்றுலா துறை அமைச்சர் தகவல்

/

கால்வாயை துார்வார நிதியில்லை ; மிதவை உணவகம் இயக்கம் தாமதம் :சுற்றுலா துறை அமைச்சர் தகவல்

கால்வாயை துார்வார நிதியில்லை ; மிதவை உணவகம் இயக்கம் தாமதம் :சுற்றுலா துறை அமைச்சர் தகவல்

கால்வாயை துார்வார நிதியில்லை ; மிதவை உணவகம் இயக்கம் தாமதம் :சுற்றுலா துறை அமைச்சர் தகவல்


ADDED : ஆக 16, 2024 11:47 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம் : முட்டுக்காடு பகிங்ஹாம் கால்வாயை துார்வாரும் பணிக்காக, பொதுப்பணி நீராதாரத் துறையிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் மிதவை உணவகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ், சென்னை அடுத்த முட்டுக்காடு பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், படகு குழாம் இயங்குகிறது. இக்குழாமில் பலவகை படகுகளில், பயணியர் சவாரி பயணம் செல்கின்றனர். பயணியரை மேலும் வசீகரிக்கக் கருதி, கால்வாயில் மிதவை உணவகம் இயக்க, சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகம் முடிவெடுத்தது.

தனியார் பங்களிப்பில் செயல்படுத்த, கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்நிறுவனம், 5 கோடி ரூபாய் மதிப்பில், 125 அடி நீளம், 25 அடி அகலம் அளவில், நவீன குளிர்சாதன வசதி கொண்ட மிதவை உணவக படகை, பல மாதங்களுக்கு முன் உருவாக்கியுள்ளது. அதை இயக்கத் தயாராக இருந்தும், தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச காற்றாடி திருவிழாவை துவக்கி வைத்த, சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம், மிதவை உணவகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது:

மிதவை உணவகம் கட்டுமானப் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு தயாராகவே உள்ளது. பயணியர் படகை அணுகுவதற்காக, நிறுத்துமிடமான ஜெட்டி தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அமைக்கப்பட்ட தளம், நிலையாக இல்லாமல் அசைவது கண்டறியப்பட்டது. எனவே, குறைபாடுகளை களைந்து, படகு நிறுத்தும் தளம் தரமாக அமைக்கப்பட்டு வருகிரது.

அதுமட்டுமின்றி, இப்படகு இயங்குவதற்கு ஏற்ற வகையில், கால்வாயை துார்வாரி ஆழப்படுத்தும் பணியை செயல்படுத்த நிதி தேவைப்படுகிறது. அந்த நிதிக்காக, பொதுப்பணி நீராதாரத் துறையிடம் பரிந்துரைத்துள்ளோம். நிதி கிடைத்தவுடன் இப்பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் மிதவைப் படகு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us