/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டிரைவரை தாக்கி கார் திருட்டு மூவருக்கு வலை
/
டிரைவரை தாக்கி கார் திருட்டு மூவருக்கு வலை
ADDED : மே 22, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர்: சென்னை, நன்மங்கலத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி 42; சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
நேற்று, தன் 'இனோவா' காரில் வெங்கடேசன் என்பவரை ஏற்றிக் கொண்டு, பவுஞ்சூரில் உள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பண்ணைக்கு சென்றார்.
காரை பண்ணைக்கு வெளியே நிறுத்திவிட்டு, பாலசுப்ரமணி காரில் அமர்ந்திருந்தார். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல், பாலசுப்ரமணியை தாக்கி, காரை திருடி சென்றனர்.
இதுகுறித்து பாலசுப்ரமணி அணைக்கட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

