ADDED : ஜூலை 10, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் வடிகால்வாய் பணி காரணமாக, திருக்கழுக்குன்றம் சாலை தடத்தில் வாகன ஓட்டிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் – திருக்கழுக்குன்றம் சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. இதில் உள்ளூர், வெளியூர், சுற்றுலா வாகனங்கள் கடந்து செல்கின்றன. தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில், இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, பள்ளம் தோண்டும் பணி நடப்பதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாமல்லபுரத்தில் இருந்து, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகள் நோக்கி செல்லும் வாகனங்கள், புதுச்சேரி புறவழிச்சாலை மற்றும் கோவளம் வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
