/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தில் திருப்போரூரில் வாகன நெரிசல்
/
அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தில் திருப்போரூரில் வாகன நெரிசல்
அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தில் திருப்போரூரில் வாகன நெரிசல்
அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தில் திருப்போரூரில் வாகன நெரிசல்
ADDED : ஏப் 04, 2024 06:16 AM

திருப்போரூர்: திருப்போரூர் பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர்., சிலை அருகே, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் வைகைச்செல்வன், நேற்று இரவு 7:00 மணிக்கு பிரசாரம் மேற்கொண்டார்.
ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, பிரசார வாகனத்தில் நின்றவாறு வைகைச்செல்வன் பேசினார்.
அப்போது, வாகனத்தின் முன் அ.தி.மு.க.,வினர் குவிந்திருந்தனர்.
அதனால், சாலையில் வாகனங்கள் செல்ல வழியில்லாமல், வரிசை கட்டி ஊர்ந்து சென்றன. பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே, அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. உடனே, போலீசார் மற்றும் அ.தி.மு.க.,வினர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினர்.