/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் பராமரிப்பில்லாத குப்பை தொட்டிகள்
/
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் பராமரிப்பில்லாத குப்பை தொட்டிகள்
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் பராமரிப்பில்லாத குப்பை தொட்டிகள்
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் பராமரிப்பில்லாத குப்பை தொட்டிகள்
ADDED : மார் 28, 2024 12:47 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், செங்கை புறநகர் பகுதியில் உள்ள சிங்கபெருமாள் கோவில், ஊரப்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட ஊராட்சிகளும் அடக்கம்.
இந்த பகுதியில், தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கி, மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
அதே போல, பாலுார், ரெட்டிப்பாளையம், ஆப்பூர், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பையை சேகரிக்க, ஊரக வளர்ச்சி துறை சார்பில், அனைத்து ஊராட்சிகளுக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும், ஊராட்சிகளை துாய்மையாக வைத்துக்கொள்ள, ஊராட்சிகள் வாயிலாக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது தவிர, நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ், கிராமங்களை துாய்மையாக வைத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது பல ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பை, ஆங்காங்கே தெருக்களின் ஓரம் கொட்டி எரிக்கப்படுகிறது.
ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குப்பை தொட்டிகள், சாலைஓரங்களில் கவிழ்ந்து கிடக்கின்றன. மேலும், பல ஊராட்சிகளில் குப்பை தொட்டிகள் உடைந்து காணப்படுகின்றன.
பாலுார் ஊராட்சி,தேவனுார் கிராமத்தில், காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த குப்பைத் தொட்டியை, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாட்டு சாணம்கொண்டு, வரட்டி தட்ட பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, இந்த குப்பை தொட்டிகளை முறையாக பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள்வலியுறுத்தியுள்ளனர்.

