/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமுதாய நலக்கூடம் அமைக்க மாம்பாக்கத்தில் வலியுறுத்தல்
/
சமுதாய நலக்கூடம் அமைக்க மாம்பாக்கத்தில் வலியுறுத்தல்
சமுதாய நலக்கூடம் அமைக்க மாம்பாக்கத்தில் வலியுறுத்தல்
சமுதாய நலக்கூடம் அமைக்க மாம்பாக்கத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 25, 2024 01:21 AM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மாம்பாக்கம் ஊராட்சியை சுற்றி, கொளத்துார், சோணலுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்கள் இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை நடத்த, சமுதாய நலக்கூடம் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால், தனியார் திருமண மண்டபங்களில், அதிக வாடகை கொடுத்து, சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக, இப்பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது வரை சமுதாயக் கூடம் அமைக்கப்படவில்லை.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், சமுதாய நலக்கூடம் அமைத்து தர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.