/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு
/
சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு
சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு
சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு
ADDED : மார் 09, 2025 11:41 PM

மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த கிராமத்தில் கோவிந்தாபுரம் -- அனுமந்தபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்த சாலையின் இருபுறமும் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் சாலையில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த பகுதியில் மழை நீர் செல்லும் கால்வாயை பலர் ஆக்கிரமிப்பு செய்து மாட்டுசாணம் கொட்டி தண்ணீர் வெளியேற முடியாதபடி செய்து உள்ளனர். மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இல்லை.
இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள அனுமந்தபுரம், சென்னேரி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இந்த வழியாக செல்லும் போது அவதியடைந்து வருகின்றனர்.
இந்த சாலை அமைக்க வேண்டும் என செங்கல்பட்டு தொகுதி தி.மு.க., - எம் எல்.ஏ., கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்து பேசினார். இருப்பினும் இதுவரை சீரமைக்கும் பணிகள் கூட நடைபெறாமல் உள்ளது.
கிராம மக்களும் காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரைவில் சுற்றியுள்ள கிராம மக்களை திரட்டி அனுமந்தபுரம் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.