/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேவையற்ற இடத்தில் குளம் உருவாக்கி வண்டலுாரில் வரிப்பணம் வீணடிப்பு
/
தேவையற்ற இடத்தில் குளம் உருவாக்கி வண்டலுாரில் வரிப்பணம் வீணடிப்பு
தேவையற்ற இடத்தில் குளம் உருவாக்கி வண்டலுாரில் வரிப்பணம் வீணடிப்பு
தேவையற்ற இடத்தில் குளம் உருவாக்கி வண்டலுாரில் வரிப்பணம் வீணடிப்பு
ADDED : பிப் 26, 2025 11:43 PM

வண்டலுார் வண்டலுார் ஊராட்சியில், பகுதிவாசிகளின் விருப்பத்திற்கு மாறாக குளம் உருவாக்கி, மக்களின் வரிப்பணம், 23 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு பகுதிவாசிகள் பொழுது போக்க பூங்கா, நுாலகம் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லை.
வாலாஜாபாத் சாலை ஓரம் உள்ள தாங்கல் ஏரியை துார் வாரி, அதன் கரையோரம் பெண்கள், குழந்தைகள் பொழுதுபோக்கவும், சுகாதாரத்தைப் பேணும் வகையில் நடைபயிற்சி மேற்கொள்ள பாதை அமைக்கவும், பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக, தாங்கல் ஏரிக்கு எதிர்ப்புறம், பிள்ளையார் கோவில் அருகே கடந்த 2022ல், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் வாயிலாக, 23 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில், 50 சென்ட் இடத்தில் குளம் உருவாக்கப்பட்டு, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
தரமற்ற முறையில் அந்த குளம் உருவாக்கப்பட்டது. இதனால், பல வீடுகளின் கழிவுநீர்த் தேக்கமாக அந்த இடம் மாறியது. பின், ஆகாயத் தாமரை படர்ந்து, கொசு உற்பத்திக் கூடமாக தற்போது அந்த குளம் உள்ளது.
எந்த நோக்கத்திற்காக, பயன்பாட்டிற்காக அந்த குளம் உருவாக்கப்பட்டது என்பதே தெரியவில்லை. அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு குளத்தை உருவாக்கி, பின் எவ்வித பராமரிப்பும் செய்யாமல் விட்டுச் சென்றனர்.
இதனால், மக்களின் வரிப்பணம் முற்றிலுமாக வீணடிக்கப்பட்டு உள்ளது. எனவே, குளத்தை துார் வாரி, சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து, கழிவுநீர் கலக்காமல் பாதுகாத்திட, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.