/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
/
புதிய 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
புதிய 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
புதிய 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : பிப் 24, 2025 11:29 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்கப்பட்டது.
இதில், செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பயனடைந்தனர்.
இந்த ஸ்கேன் இயந்திரத்தை மாற்றி, புதிய எம்.ஆர்.ஜ., ஸ்கேன் வழங்க வேண்டும் என, அரசு மற் றும் மருத்துவக் கல்லுாரி இயக்குநருக்கு, கருத்துரு அனுப்பி வைத்தனர்.
அதன் பின், புதிய எம்.ஆர்.ஜ., ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய, 12 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனை அவசர சிகிச்சை பகுதியில், புதிய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்து, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், நோயாளிகள் நலன் கருதி, இந்த எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மையத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.