/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விசாரணைக்கு சென்று திரும்பியபோது சீர்திருத்த பள்ளி சிறுவன் தப்பி ஓட்டம்
/
விசாரணைக்கு சென்று திரும்பியபோது சீர்திருத்த பள்ளி சிறுவன் தப்பி ஓட்டம்
விசாரணைக்கு சென்று திரும்பியபோது சீர்திருத்த பள்ளி சிறுவன் தப்பி ஓட்டம்
விசாரணைக்கு சென்று திரும்பியபோது சீர்திருத்த பள்ளி சிறுவன் தப்பி ஓட்டம்
ADDED : மே 30, 2024 10:04 PM
மேல்மருவத்துார்:மேல்மருவத்துாரில் தப்பி ஓடிய சிறுவர் சீர்திருத்த பள்ளியைச் சேர்ந்த சிறுவனை, போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், 53, என்பவர், மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த மேல்மருவத்துார் போலீசார் கூறியதாவது:
சென்னையைச் சேர்ந்த சண்முகன் மகன் சுஜித், 15. இவர், செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில், வழக்கு விசாரணைக்காக, நேற்று முன்தினம் செங்கல்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து, தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிமன்றத்திற்கு, சுஜித் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் செங்கல்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது, நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்மருவத்துார் பெட்ரோல் பங்கில், இயற்கை உபாதை கழிக்க, போலீசார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
போலீசார் எதிர்பாராத நேரத்தில், சுஜித் டாட்டா சுமோ வாகனத்தில் இருந்து குதித்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து, பொம்மிடி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்து, தப்பி ஓடிய சீர்திருத்தப்பள்ளி சிறுவனை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.