sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடப்பாக்கம் சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அமையுமா?

/

கடப்பாக்கம் சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அமையுமா?

கடப்பாக்கம் சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அமையுமா?

கடப்பாக்கம் சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அமையுமா?


ADDED : ஜூலை 24, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்,:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

வேம்பனுார், ஆலம்பரைகுப்பம், விளம்பூர் போன்ற, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது.

சுமார், 30,000 மேற்பட்ட கிராம மக்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மருத்துவம், மகப்பேறு, தடுப்பூசி, நோய்த்தடுப்பு என, பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில், அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிக்கி, காயமடைவோரை, அவசர சிகிச்சைக்கு, 60 கி.மீ., தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், 45 கி.மீ., தொலைவில் உள்ள புதுச்சேரிக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நீண்ட துாரம் செல்ல வேண்டி உள்ளதால், செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தற்போது, கிழக்கு கடற்கரைச் சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வரும் நிலையில், கடலுார், கும்பகோணம், சிதம்பரம் போன்ற கடலோர மாவட்டங்களுக்கு, அதிக அளவில் வாகனங்கள் செல்ல உள்ளதால், மேலும் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, கடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us