/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை சுற்றுலா தலமாக மேம்படுமா?
/
சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை சுற்றுலா தலமாக மேம்படுமா?
சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை சுற்றுலா தலமாக மேம்படுமா?
சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை சுற்றுலா தலமாக மேம்படுமா?
ADDED : ஆக 09, 2024 01:51 AM

மாமல்லபுரம்:கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில், கி.பி., 17ம் நுாற்றாண்டில், 'டச்சு' எனப்படும் நெதர்லாந்து நாட்டு வர்த்தகர்கள், செங்கல் கோட்டை அமைத்து, சில நுாற்றாண்டுகள் வசித்தனர். ஆடை, நறுமண பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டனர்.
அவர்களின் வளர்ச்சி, ஆங்கிலேயரை ஈர்த்தது. அதனால், கடந்த 1796, 1818ம் ஆண்டுகளில் படையெடுத்த ஆங்கிலேயர்கள், சதுரங்கப்பட்டினம் கோட்டையை கைப்பற்றி அழித்தனர்.
அதன் பின் நடந்த தொல்லியல் துறை ஆய்வில், வாழ்விட கட்டடம், நடன கூடம், பார்வையாளர் மாடம், தானிய கிடங்குகள், நுழைவாயில் பீரங்கிகள், உயரமான சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றுடன் கோட்டை அமைப்பு உள்ளது கண்டறியப்பட்டது.
சீனா, ஜெர்மன் ஆகிய நாட்டு சுடுமண் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டன. 'டச்சு' பிரமுகர்களின் கல்லறைகளும் காணப்படுகின்றன. கோட்டைச் சுவர், தானிய கிடங்கு இடிபாடுகளே, தற்போது உள்ளன.
கிடைக்கப்பெற்றுள்ள கோட்டை கட்டுமானங்களை, தற்போது தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இடிந்த கட்டடங்கள், இடிந்த சுற்றுச்சுவர் ஆகியவை, பழங்கால முறையில் புனரமைக்கப்பட்டு உள்ளது.
வரலாற்று சான்றாக விளங்கும் சதுரங்கப்பட்டினம் கோட்டை வளாகத்தை, புல்வெளி, வண்ண மலர் செடிகள், இருக்கைகள், நடைபாதை, மின்விளக்கு ஆகியவற்றுடன், சுற்றுலா பொழுதுபோக்கு இடமாக மேம்படுத்தலாம் என, ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் அருகில், கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம், நகரியம் ஆகிய பகுதிகள் உள்ள நிலையில், அணுசக்தி துறை சமூக பொறுப்பு திட்டத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, தொல்லியல் துறை அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.